56 பேர் திமுக கட்சியிலிருந்து நீக்கம்: அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

56 பேர் திமுக கட்சியிலிருந்து நீக்கம்: அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

தமிழகத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக அடிப்படை உறுப்பினர்கள் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது;

தமிகத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து திமுக-வின் அடிப்படை உறுப்பினர்கள் 56 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் திமுக  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக விடுவிக்கப் படுகிறார்கள்.

-இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 7-வது வட்டச் செயலாளர் பி.ஆதி குருசாமி, மாதவரம் வடக்கு பகுதி 23வது வட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் என்.மேனகா நித்யானந்தம், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 92வது வட்டத்தைச் சேர்ந்த கே.நீலகண்டன், 144-வது வட்டத்தைச் சேர்ந்த பகுதி துணைச் செயலாளர் எம்.எம்.சீதாபதி, சேலம் மத்திய மாவட்டம், சேலம் மாநகர துணைச் செயலாளர் லலிதா சுந்தர் ராஜன் உள்ளிட்ட 56 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com