23-வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்: சிறப்பு டூடுல் வெளியீடு!

23-வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்: சிறப்பு டூடுல் வெளியீடு!

கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

இணையத்தில் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம், மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களும் 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்கினர். அந்தவகையில் கூகுள் நிறூவனம் இன்றூ தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

இந்த நாளைக் கொண்டாடும் வகையில் சிறப்பு கூகுள் டூடுலை டிசைன் செய்து வெளியிட்டுள்ளது. அதில் கூகுளின் உருவாக்கம், மற்றும் செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com