3லட்சம் லஞ்ச பேரம்: சிறைத்துறை அதிகாரியிடம் பப்ஜி மதன் மனைவி பேசியது அம்பலம்!

3லட்சம் லஞ்ச பேரம்: சிறைத்துறை அதிகாரியிடம் பப்ஜி மதன் மனைவி பேசியது அம்பலம்!

பிரபல யூ டியூபர் மதன் தன் யூடியூப் சேனல்கள் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு விளையாடியதுடன் பெண்களை ஆபாசமாக பேசியதாகவும், பணம் கையாடல் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து, சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார் சிங் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com