31 மில்லியன் டாலர் நிவாரணப் பொருட்கள்: ஆப்கானிஸ்தானுக்கு சீனா உதவி!

31 மில்லியன் டாலர் நிவாரணப் பொருட்கள்: ஆப்கானிஸ்தானுக்கு சீனா உதவி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசை அறிவித்துள்ள நிலையில், 31 மில்லியன் டாலர் பணத்துக்குரிய நிவாரணப் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு சீனா அனுப்புவதாக அறிவித்துள்ளது.

தாலிபான் தலைமையில் அமைந்த ஆப்கானிஸ்தான் ஆட்சி பற்றி விவாதிப்பதற்காக சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ காணொலி வாயிலாக கூட்டிய கூட்டத்தில் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த காணொலிக் காட்சியில், ஆப்கான் மக்களுக்கு 31 மில்லியன் டாலர் மதிப்புள்ள மனிதநேய உதவிகளாக உணவு தானியங்கள், பனிக்கால உடைகள், தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com