4 ஆப்களை போனில் வைத்தால், மொத்த பணமும் காலி: ஸ்டேட் பாங்க் எச்சரிக்கை!

4 ஆப்களை போனில் வைத்தால், மொத்த பணமும் காலி: ஸ்டேட் பாங்க் எச்சரிக்கை!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை செல்போன்களில்  4 ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 4 ஆப்கள் மூலமாக மோசடி நபர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் திருடுவதாக ஸ்டேட் பாங்க் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரத் ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் AnyDesk, Quick Support, Teamviewer மற்றும் Mingleview செயலியை பதிவிறக்க செய்ய வேண்டாம். கடந்த 4 நான்கு மாதங்களில் மட்டும் இந்த நான்கு செயலிகளால், 150 வாடிக்கையாளர்கள் 70 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடிககாரர்களிடம் இழந்துள்ளனர். மோசடி செய்பவர்கள் இந்த ஆப்கள் மூலமாக முறைகேடாக வாடிக்கையாளர்களின் முழு வங்கிக் கணக்கையும் காலி செய்கின்றனர். ஆகவே இந்த 4 ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். மேலும் அறிமுகமற்ற நபர்களிடமிருந்து வரும் யுபிஐ சேகரிப்பு கோரிக்கை அல்லது கியூஆர் குறியீட்டை ஏற்க வேண்டாம்.

-. இவ்வாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

SBI (பாரத ஸ்டேட் வங்கி) என்ற பெயரில் அரை டஜன் போலி வலைத்தளங்கள் இயங்குவதாகவும் அதனால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது அவசியம் என்றும் இந்த வங்கி எச்சரித்துள்ளது.

அதிகாரபூர்வமாக ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் பிறகு, வங்கி ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறது. நீங்கள் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால் உடனடியாக அந்த செய்தியை எஸ்எம்எஸ் -ல் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பவும் என்று தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com