4 பேரை கொன்ற நீலகிரி புலி: அதை சுட்டுப் பிடிப்பதற்கு எதிராக வழக்கு!

4 பேரை கொன்ற நீலகிரி புலி: அதை சுட்டுப் பிடிப்பதற்கு எதிராக வழக்கு!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா வைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டதாவது:

புலி ஆட்களைக் கொள்ளும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. எனவே நீலகிரியில் அந்த புலியை சுட்டுப்பிடிப்பது கூடாது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உரிய சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

-இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கு நாளை தள்ளி வைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com