
உலகின் மிகச் இச்சிறந்த விமான நிறுவனமாக இந்த ஆண்டின் விருதுக்கு தேர்ந்தெருக்கப் பட்டுள்ளது " கத்தார் ஏர்வேஸ்" . இந்நிறூவனம் இந்த விருதை தொடர்ச்சியாக 6-வது முறியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமான போக்குவரத்து மதிப்பீட்டு நிறுவனமான ஸ்கைடிராக்ஸ், இந்த ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக " கத்தார் ஏர்வேஸ்'சை தேர்ந்தெடுத்துள்ளது. உலகிலேயே சிறந்த பிசினெஸ் கிளாஸ், பிசினெஸ் கிளாஸ் லாஞ்ச், பிசினெஸ் கிளாஸ் ஏர்லைன் சீட், பிசினஸ் கிளாஸ் ஆன் போர்டு கேட்டரிங் மற்றும் மத்திய கிழக்கில் சிறந்த ஏர்லைன் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த வசதிகளை சரியான முறையில் தொடர்ந்து கொடுத்து வருகிறது என்றும் கூறியியுள்ளது. இது கத்தார் ஏர்வேஸ் பெரும் 6-வது விருதாகும்
இதுபற்றி பேசிய கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் கூறியதாவது:
'உலகின் சிறந்த விமான நிறுவனமாக ஆறாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதுக்காக எங்கள் விசுவாசமான பயணிகளுக்குத்தான் நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.உலகின் சவாலான இக்காலகட்டத்தில் நாங்கள் பெற்ற இந்த விருது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இந்த வெற்றிக்கு முதல் காரணம் எங்களின் வாடிக்கையாளர்கள் தான். அவர்களை அழைத்துச் செல்ல நாங்கள் பறந்து கொண்டே இருந்தோம்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.