600 சீன பிராண்டுகள்: நிரந்தரமாக நீக்கியது அமேசான்!

600 சீன பிராண்டுகள்: நிரந்தரமாக நீக்கியது அமேசான்!

ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனம், சீனாவின் 600 பிராண்டுகளின் பொருட்களை நிரந்தரமாக நீக்கியுள்ளது. இது சீனாவுக்குப் பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது.

தி வெர்ஜ் இணையதளத்தில் இது தொடர்பான வெளியான செய்தியில், உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த 600 பிராண்டுகளின் பொருட்களையும் அமேசான் தடை செய்துள்ளதாகத் தெரிகிறது. அமேசான் நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு இந்தக் கெடுபிடியை அமேசான் விதித்துள்ளது.

ஏற்கெனவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, சீன பிராண்ட்கள் சில வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்கள் பற்றி நல்ல மாதிரியான கருத்துகளைப் பகிர சலுகையாக கிஃப்ட் கூப்பன் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளதை அம்பலப்படுத்தியது.

இது குறித்து தி வெர்ஜ் இணையதளத்துக்கு அமேசான் நிறுவனம் அளித்த பேட்டி:.

அமேசான் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், அப்பொருட்களுக்கான பின்னூட்டத்தை மிகவும் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் பொருட்களைத் தேர்வு செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் இருவருமே பயனடைகின்றனர். அதனால் ஒரே நேரத்தில் 600 சீன நிறுவனங்களுக்கு அமேசானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com