9.8 லட்சத்தில் அசத்தல் அங்கன்வாடி: மாநிலத்துக்கே முன்மாதிரி என பாராட்டு!

9.8 லட்சத்தில் அசத்தல் அங்கன்வாடி: மாநிலத்துக்கே முன்மாதிரி என பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் இருந்த பழுதடைந்த அங்கன்வாடி மையம் 9.8 லட்சம் ரூபாயில் புதிதாய் கட்டப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் காண்போர் கண்களை கவரும் வண்ணம் உருவாக்கப் பட்டுள்லது. இந்த புதிய கட்டிடத்தில் சமையலறை, ஸ்டோர் ரூம், குழந்தைகளுக்கு படிக்க – விளையாட அறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண கார்ட்டூன்கள். உள் புறத்தில் காய்கறிவகைகள், பழவகைகள், தேசத் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக வாசிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடத்திட்ட வகைகளும் குழந்தைகள் பரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு காய்கறி, கீரைகள் தோட்டம் அமைத்து தினமும் சத்தான கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இந்த அங்கன்வாடி கட்டிடம் முன்மாதிரி கட்டிடமாக அமையும் எனவும்  ஊராட்சி உதவி இயக்குனர் கேசவன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com