
நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணூவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவர்களின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அந்த 13 வீரரகளின் பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, நீலகிரி அருகே பார்லியர் மலைப்பகுதியில் பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து நிலையில், தற்போது உடலை எடுத்துச் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த வீரரின் உடல் மற்றொரு வாகனத்துக்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.