ப்ரெட் உப்புமா

ப்ரெட் உப்புமா

நளினி ராமச்சந்திரன்.

தேவை:
ப்ரெட்___10
நறுக்கிய வெங்காயம்-1 கப்
நறுக்கிய தக்காளி-1 கப்
கடுகு-1 டீ ஸ்பூன்
சீரகம்-1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு-1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லிசிறிதளவு
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு _தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்காரத்திற்கேற்ப
பெருங்காயம்-1 டீ ஸ்பூன்
மஞ்சள்பொடி-1 டீ ஸ்பூன்

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சீரகம் மிளகாய் போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் தக்காளி மஞ்சள்பொடி போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் ப்ரெட்டை சிறிய துண்டுகளாக கட் செய்து இதனுடன் போட்டு கிளறவும்.பெருங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையான ப்ரெட் உப்புமா ரெடி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com