#Breaking: தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் தரையிறக்கம்: ஒத்திகை வெற்றி!

#Breaking: தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் தரையிறக்கம்: ஒத்திகை வெற்றி!

Published on

நாட்டின் அவசர காலங்களில் போர் விமானங்களை, தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் சோதனையை இந்திய ராணூவம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலூரில் நடத்தியது. இந்த ஒத்திகையில் இந்திய போர் விமானம் C-130J வெற்றிகரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.

இந்திய விமானப்படையின் ஜாகுவார் மற்றும் சி-130 ஜெ (C-130J Super Hercules) ரக போர் விமானங்கள் இராஜஸ்தானில் உள்ள ஜாலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி, பின்னர் மீண்டும் மேலெழும்பி தனது விமானப்படை நிலையத்திற்கு செல்லவுள்ளது. இந்த ஒத்திகையில் போது சி-130 ஜே ரக விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்கரி, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா ஆகியோர் விமானத்தில் பயணம் செய்தனர். முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொண்டார். இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்று, ராணூவ விமானம் எந்த சிரமமும் இன்றி தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com