கொரோனா பரவல் தீவிரம்: பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கொரோனா பரவல் தீவிரம்: பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

Published on

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், அதைக் கடுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறீத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளாது..

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளும்ம் மூடப்பட்ட உள்ளன. கொரோனா பரவலைக் தடுக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதிநாளான ஞாயிறு முழு ஊரடகு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com