
நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் இன்றுமுதல் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்ததாவது:
எஸ்.பி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் இன்று முதல் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும். சமீபத்திய நடவடிக்கையாக, எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (SBICPSL) செயலாக்கக் கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்படுகிறது. இதற்கான வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் கடன் வழங்குபவர் இந்தச் செயலாக்கக் கட்டணத்தை வசூலிப்பார். மேலும் அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா போன்ற இ–காமர்ஸ் இணையதளங்களுக்கும் இது பொருந்தும். இது குறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
–இவ்வாறு எஸ்.பி.ஐ வங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.