டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை!

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை!

Published on

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்ற டி23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறீயதாவது:

கடந்த 22 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நேற்று பிற்பகல் டி23 புலி உயிருடன் பிடிக்கப் பட்டது. இந்நிலையில் அதன் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், மருத்துவக் குழு அறிவுறுத்தல்படி புலியை மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.  அந்த புலிக்கு மன அழுத்தமும், பிற புலிகளுடன் சண்டையிட்டதால் உடலில் காயங்களும் ஏற்பட்டிருந்தன. இப்போது மைசூர் உயிரியல் பூங்காவில் அநத புலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புலி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. சிகிச்சை முடிந்தபின் 10 நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

  1. -இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
logo
Kalki Online
kalkionline.com