
கே எஸ் கிருஷ்ணவேணி, பெருங்குடி.
தேவை:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – தேவையானது
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
ஸ்டஃபிங் செய்ய:
கடலைப்பருப்பு – ஒரு கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
ஓமம்– சிறிது
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு .
உப்பு– தேவையான அளவு.
செய்முறை: தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து பராத்தா மாவை 30 நிமிடம் ஊற விடவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தேவையான அளவு நீர் விட்டு 20 நிமிடம் வேகவிடவும். குழைய வேக வேண்டிய அவசியமில்லை. கிள்ளி பதத்தில் வெந்ததும் நீரை வடித்து மிக்ஸியில் பொடிக்கவும். இப்போது வாணலியில் பொடித்த கடலைப்பருப்பை சேர்த்து தேவையான உப்பு ,ஓமம், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்து கையால பரத்திக்கொண்டு ஸ்டஃபிங்கை ஒரு உருண்டை அளவு எடுத்து உள்ளே வைத்து மூடி சப்பாத்தி போல் திரட்டவும். இதனை தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க சுவையான தால் பராத்தா ரெடி. தொட்டுக்கொள்ள கெட்டி தயிர் ,ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.