தோசை சுட்டு வாக்கு சேகரிப்பு : பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை அசத்தல்!

தோசை சுட்டு வாக்கு சேகரிப்பு : பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை அசத்தல்!

சென்னை மாநகராட்சி வார்டு 55 -ல் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த உணவாக உரிமையாளர் ஒருவர் தனக்கு  தோசை சுட்டுக் கொடுத்தால்,  பாஜகவுக்கு வாக்களிப்பதாக கூறினார். அந்த  சவாலை ஏற்று அண்ணாமலை தோசை சுட்டு தந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.22-ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை மாநகராட்சி வார்டு 55_ல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த உணவாக உரிமையாளர் ஒருவர் தன்னிடம் கச்சிதமாக தோசை சுட்டால் பாஜகவுக்கு வாக்களிப்பேன் என கூறியுள்ளார்.

கடை உரிமையாளரின் சவாலை ஏற்று அண்ணாமலை தோசை சுட்டு அந்த கடை உரிமையாளரின் வாக்கை பாஜகவுக்கு பெற்று தந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com