இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகள்: மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகள்: மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் கோர்பேவாக்ஸ் சோவோவேக்ஸ் என்ற மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கும் Molnupiravir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் இன்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளீயிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 6 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று Corbevax மற்றும் Covovax என்ற மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது தவிர Molnupiravir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டேவியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

கொரோனாவுக்கு எதிரான போரில் இன்று ஒரே நாளில் Corbevax மற்றும் Covovax ஆகிய 2 தடுப்பூசிகள், Molnupiravir என்ற ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து என 3 ஒப்புதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் அளித்திருக்கிறது Corbevax தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள 3-வது தடுப்பூசியாகும். இது RBD protein sub-unit தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த Biological-E என்ற நிறுவனத்தால் இது உற்பத்தி செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். மேற்கண்ட ஒப்புதல்கள், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மேலும் வலுவூட்டுவதாய் அமையும். நம்முடைய மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் சொத்தாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com