ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு!
பொங்கல் பண்டிகையின்போது மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஜல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை மேலமடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை 15 வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தெரிவித்ததாவது:
பொங்கல் பண்டிகையன்று மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க திட்டமிடப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அமைதிக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி. மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசிடம் அனுமதி கோருவோம். முன்பு தமிழகம் முழுவதும் சுமார் 600 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இப்போது 100-க்கும் குறைவாக ஆகிவிட்டது. எனவே பொது இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
–இவ்வாறு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தெரிவித்தார்.