திருநள்ளாறில் 144 தடை உத்தரவு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருநள்ளாறில் 144 தடை உத்தரவு:  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாமக கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி நேற்று காரைக்காலில் மர்மகும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை அவரது உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம், கலவரத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com