தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தடை!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தடை!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 

மேலும் இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்தார்.  

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி உத்தரவிட்டதாவது:

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. தற்காலிக பணி நியமனம் மூலம் தகுதியற்றவர்கள் கூட நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாமே.. அதில அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது

இவ்வாறு  கேள்வி எழுப்பி, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு  இடைக்கால தடை விதித்து நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com