தூதரகம் மூலமாக இலங்கைக்கு நிவாரணம் அனுப்பலாம்; மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்!

தூதரகம் மூலமாக இலங்கைக்கு நிவாரணம் அனுப்பலாம்; மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்!

இலங்கைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருள்கள் இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு அனுப்பி வைக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில் தமிழக இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் அனுப்ப அனுமதிக்குமாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்மானம் நிவேற்றப்பட்டது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இந்திய தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிணைந்து செயல்படலாம்.

-இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com