புதுக் கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்: பீகாரில் பரபரப்பு!

புதுக் கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்: பீகாரில் பரபரப்பு!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், நாளை பீகாரில் புதிதாக கட்சி தொடங்கவுள்ளதாக வெலியான செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்க மறுத்தார் இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் தன் டிவிட்ட்ர பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டம் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய புதிய  அரசியல் பயணத்தை எனது சொந்த மாநிலமான பீகாரிலிருந்து தொடங்க உள்ளேன். 

-இவ்வாறு நேற்று முன்தினம் (மே 2) தன்  ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர், நாளை தனது புதிய அரசியல் கட்சி குறித்த விவரங்களை தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் சமூக ஆர்வலர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், மற்றும் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசியுள்ளார். மேலும், அவர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளையும் அறியவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com