10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவு!

10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.மேலும் 11-ம் வகுப்புக்கான  பொதுத் தேர்வுகள் வருகிற 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மே 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் வகுப்பரியில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்ததாவது;

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் செய்முறை தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது

இந்நிலையில் நாளையிலிருந்து 10 மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன.  இத்தேர்வுகள் எழுதும் அறையில் மாணவர்களும் அவற்றைக் கண்காணிக்கும் ஆசிரியர்களும் கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டும்.

-இவ்வாறு தமிழக அரசு மருத்துவத்துறை அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாத நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும்,முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தமிழக மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும்போது, முழு நேரமும் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com