விழுப்புரம் சமத்துவபுரம் திறப்புவிழா: வாலிபால் ஆடிய முதல்வர் ஸ்டாலின்!

விழுப்புரம் சமத்துவபுரம் திறப்புவிழா: வாலிபால் ஆடிய முதல்வர் ஸ்டாலின்!
Published on

விழுப்புரத்தில் இன்று சமத்துவபுரம் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் அங்கு வாலிபால் ஆடிய சம்பவம் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் .2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 100 பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ், தமிழக அமைச்சர்கள் மா சுப்பிரமணியம், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சமத்துவபுரத்தில் உள்ளே இருக்கும் மைதானத்திற்கு முதல்வர் வாலிபால் விளையாடினார். முதல் பந்தை முதல்வர் ஸ்டாலின் சர்வ் செய்ய ஆட்டம் தொடங்கியது. கடைசியில் முதல்வர் ஸ்டாலின் ஆடிய அணி வெற்றி பெற்றது. பின்னர் அங்குள்ள ரேஷன் கடையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அதன்பின்னர் விழா மேடையில் சமத்துவபுரத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். அச்சமயம் அக்கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியை சட்டென்று முதல்வர் அழைத்து ரிப்பன் கட் பன்ணச் செய்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர் கம்சலா என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கிய பின்பு,  ஸ்டாலின் பேசியதாவது;

இந்த நிகழ்ச்சி உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற கூடிய நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. கலைஞர் ஆட்சியின்போது, நான் உள்ளாட்சி துறையை நிர்வகித்தபோது ஸ்டாலினை பார்த்தால் பொறாமையாக உள்ளது. நான் அந்த துறையை வைத்திருந்தால் எனக்கு இன்னும் நல்ல பெயர் கிடைத்து இருக்கும் என கலைஞர் சொல்லியிருக்கிறார்.

தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.  கொடுத்தார். எந்த பாகுபாடு, வேறுபாடு இன்றி வாழ பெரியார் கனவு கண்டார். அனைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையோடு வாழ வழிசெய்யும் வகையில் இதுபோன்ற திட்டங்கள் இன்னும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்படும்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com