கிண்டர் ஜாய் மூலம் பாக்டீரியா தொற்று பரவுகிறது: லண்டன் உணவு பாதுகாப்பு ஏஜென்ஸி அறிவிப்பு!

கிண்டர் ஜாய் மூலம் பாக்டீரியா தொற்று பரவுகிறது: லண்டன் உணவு பாதுகாப்பு ஏஜென்ஸி அறிவிப்பு!

லண்டனிலுள்ள ஃபெரெரோ  நிறுவனம் தயாரிக்கும் கிண்டர் ஜாய் சாக்லேட் ரகங்கள் உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் கிண்டர் ஜாய் சாக்லேட்கள்  குழந்தைகலின் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும் அவற்றின் மூலம்  சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று பரவுவதாகவும், ஆகவே சில கிண்டர் பிராண்ட் தயாரிப்புகளை தவிர்க்குமாறு நுகர்வோருக்கு லண்டன் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (FSA) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து லண்டன் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (FSA) கூறியதாவது:

இங்கிலாந்தில் பரவும் சால்மோனெல்லா நோய்த் தொற்றுக்கும் கிண்டர் ஜாயின் ஒரு சில தயாரிப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவிலுள்ள வேறு சில சுகாதார நிறுவனங்களின் விசாரணையிலும் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. எனவே கிண்டர் பிராண்ட் தயாரிப்புகளைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபெர்ரோ நிறுவனம், தனது கிண்டர்ஜாயின் ஒரு சில தயாரிப்புகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

-இதுகுறித்து ஃபெர்ரோ நிறுவனம் தெரிவித்ததாவது;

கிண்டர் ஜாய் மூலம் சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டதால Kinder Surprise தயாரிப்பின் சில தொகுதிகளை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளோம். கிண்டர் சர்ப்ரைஸின் 20 கிராம் பாக்கெட்களில், (Best Before 11 ஜூலை 2022 மற்றும் Best Before 7 அக்டோபர் 2022) என தேதி குறிப்பிடப்பட்ட பாக்கெட்டுகள் மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிண்டர் சர்ப்ரைஸ் தயாரிப்புகளை வாங்கியவர்கள் அதை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்த அறிவிப்புகள் சில்லறை விற்பனைக் கடைகளில் வைக்கப்படும்.

-இவ்வாறு ஃபெரெரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சால்மோனெல்லா தொற்றானது சமைக்காத பச்சை இறைச்சி, காய்ச்சாத பால், முட்டை, மாட்டிறைச்சி மற்றும் அவற்றால் தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்ரடீரியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், போன்றவை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com