மலாய் முதல் மங்கோலியா வரை; 20 மொழிகளில் மணிமேகலை காப்பியம்  மொழிபெயர்ப்பு!

மலாய் முதல் மங்கோலியா வரை; 20 மொழிகளில் மணிமேகலை காப்பியம்  மொழிபெயர்ப்பு!

தமிழகத்தின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை , மலாய், சீனம், ஜப்பானிய, மங்கோலிய மற்றும் பர்மிய மொழிகள் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப் படவுள்ளதாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தெரிவித்ததாவது:

தமிழத்தின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை மலாய், சீனம், ஜப்பானிய, மங்கோலிய மற்றும் பர்மிய மொழிகள் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப் படவுள்ளது. இந்த் காப்பியத்தை இயற்றிய சீத்தலை சாத்தனார், இதில் பவுத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் பெளத்த மதம் சார்ந்த அறநெறிகளை 30 அத்தியாயங்களில் 4 ஆயிரத்து 861அகவல் அடிகளாக இயற்றியுள்ளார்.

மேலும் பல சிறப்புகள் வாய்ந்த மணிமேகலை காப்பியத்தை பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியில் பல்வேறு நாட்டு பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபொன்று ஏற்கனவே பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வருகிற மே அல்லது ஜூன் மாதம் வெளியாகவுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com