மாட்டுக் கறி படம்: போலீசின் சர்ச்சைப் பதிவு!

மாட்டுக் கறி படம்: போலீசின் சர்ச்சைப் பதிவு!

'நாம் தமிழர்' கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர், தான் சாப்பிட்ட மாட்டுக்கறியை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்அதில் 'மாட்டு கறி' என்று மட்டும் தலைப்பிட்டிருந்தார்.  

இதையடுத்து அபூபக்கரின் டிவிட்டரில் இந்த பதிவுக்கு, சென்னை காவல்துறை பதில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அபூபக்கரின் மாட்டுக் கறி புகைப்படம் குறித்து சென்னை காவல்துறை "இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது, தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டது. 

போலீசாரின் இந்த பதிவு இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியதுஉணவு, உடை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், இதில் காவல்துறை எவ்வாறு தலையிடலாம் என்று கடும் கண்டன குரல்களும் எழுந்தன. 

மேலும், திமுகவை சேர்ந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் தன் டிவிட்டர் பக்கத்தில் காவல்துறையை கடுமையாக விமர்சித்திருந்தார். ''போலீஸின் பதிவு இந்த தேவையற்ற அறிவுரை. மக்கள் கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று அவர் பதிவிட்டார். 

இந்நிலையில் சென்னை காவல்துறை, அபூபக்கரின் டிவிட்டரில் தனது பதிலை நீக்கியது.  மேலும் தனது பதிவு குறித்து காவல்துறை விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளது. அதில் தெரிவித்ததாவது:

அபூபக்கரின் டிவிட்டர் பதிவானது சென்னை போலீஸ் டிவிட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சென்னை போலீஸ் டிவிட்டரில் இதுபோன்ற தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப் படவேண்டும் என்பதற்காக அவ்வாறு பதிவிட்டோம்.

-இவ்வாறு சென்னை போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com