பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2-ம் கல்யாணம்!

பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2-ம் கல்யாணம்!

பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் (48), இன்று டாக்டர் குர்ப்ரீத் கவுர் (32) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

-இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் தரப்பில் தெரிவித்ததாவது:

சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் எளிமையான முறையில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். குறிப்பிட்ட ஒருசில தலைவர்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான குர்ப்ரீத் கவுர், ஹரியானா மருத்துவ கல்லூரியில் படித்து தங்க பதக்கம் பெற்றவர். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில், பகவந்த் மானுக்கு ஆதரவாக ஒரு சில இடங்களில் குர்ப்ரீத் கவுர் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவந்த் மானுக்கும் அவரது முதல் மனைவிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆன நிலையில், அவரது முதல் மனைவி தனது 2 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com