முல்லை பெரியாறு அணை வீடியோ; கேரளாவுக்கு கண்டனம்! 

முல்லை பெரியாறு அணை வீடியோ; கேரளாவுக்கு கண்டனம்! 

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதால், கேரள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார் பி.ஆர்.பாண்டியன் 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன், இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

காவிரி டெல்டா பகுதிகளில் .என்.ஜி சி நிறுவனம் அரசு ஆணைக்கு புறம்பாக செயல்படுவது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனை சந்தித்து முறையிட வந்தோம். அவர் காட்பாடியில் இருப்பதால் நாளை அவரை சந்திக்க உள்ளோம்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் புகாரளிக்க உள்ளோம். தென்மேற்கு பருவ மழை பாதிப்பால் மிக பெரிய அளவில் காவிரி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் டெல்டா மாவட்ட வழியோர கிராமங்களில் உள்ள தோட்டகலை பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை காப்பீட்டை தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் 

முல்லை பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாக கேரளாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வரை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே கேரளாவில் இப்படிப்பட்ட சர்சைக்குரிய வீடியோ வைரலாக்கப்படுகிறது. 

-இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com