திருமணத்தில் திடீர் பவர் கட்; ஜோடி மாற்றி தாலிகட்டிய மாப்பிள்ளைகள்!

திருமணத்தில் திடீர் பவர் கட்; ஜோடி மாற்றி தாலிகட்டிய மாப்பிள்ளைகள்!

மத்தியப் பிரதேசத்தில் திருமண மன்டபத்தில் முகூர்த்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் பவர் கட் காரணமாக மண்மகளுக்குப் பதிலாக, அவள் தங்கைக்கு மண்மகன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி அருகே ஒரே நாளில் இரண்டு சகோதரிகளுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தேறியது. 

 ரமேஷ் லா என்பவரின் இரண்டு மகள்களான நிகிதா மற்றும் கரிஷ்மாவுக்கு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களான டங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகியோருடன் ஒரே நாளில் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண விழாவில் தாலிகட்டும் சமயத்தில் திடீர் கரன்ட் கட் ஆனது.

இச்சமயத்தில் மணப்பெண்கள் இருவரும் முகத்தை மறைத்து இருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்ததாலும், திருமண பண்டிதர் ஜோடி மாற்றி மாப்பிள்ளைகளை தாலிகட்ட வைத்துள்ளார். மணமகன்கள், தன் புதுமனைவியை தம் வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பிறகுதான் இப்படி ஜோடி மாறி தாலிகட்டிய விஷயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சமபந்தப்பட்ட குடும்பங்கள் சிறிதுநேர பிரச்சினைக்குப் பிறகு சமரசம் செய்து கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.மறுநாள் மண்மக்கள் தங்கள் சரியான துணையுடன் மீண்டும் திருமணச் சடங்குகளைச் செய்ததாக கூறப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com