பெண் பத்திரிகையாளர் படுகொலை: பாலஸ்தீனத்தில் பரபரப்பு!

பெண் பத்திரிகையாளர் படுகொலை: பாலஸ்தீனத்தில் பரபரப்பு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடக்கும் வன்முறைப் போரில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51) கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாலஸ்தீனத்தில் மேற்குக்கரை பகுதி, ஜெருசலேம் நகரத்தை சொந்தம் கொண்டாடி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51) கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார். 

இதுகுறித்து கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்ததாவது:

அல் ஜசீரா டி.வி சார்பாக எங்கள் பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்க சென்றபோது, இஸ்ரேல் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றோரு பத்திரிகையாள்ரும் பலத்த காயமடைந்தார்.

-இவ்வாறு அல் ஜசிரா தகவல் தெரிவித்துள்ளது

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com