6 கோடி ரூ நன்கொடை; இந்தியை பிரபலப்படுத்த ஐ.நா.வுக்கு இந்தியா வழங்கியது!

6 கோடி ரூ நன்கொடை; இந்தியை பிரபலப்படுத்த ஐ.நா.வுக்கு இந்தியா வழங்கியது!

ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மத்தியஅரசு ஐ.நா சபைக்கு ரூ.6.16 கோடி நிதி வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்:

இது, இந்தி@UN' திட்டம், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக இந்திய அரசு இந்தி@UN'  என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஐ. நா சபையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா குறித்த செய்திகளை இந்தியில் உலகம் முழுவதும் பரப்புவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஐநா-வுக்கு இந்தியா ரூ. 6.16 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இதற்கான காசோலையை ஐநா.வின் உலகளாவிய தகவல் தொடர்பு துறையின், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு துணை இயக்குநரும் பொறுப்பு அதிகாரியுமான மிட்டா கோசலிடம் இந்திய நிரந்தர தூதரகத்தின் தூதர் துணைப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரர் வழங்கினார்.

இந்தி மொழியில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகளை இந்தியில் பரப்பவும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதுமுள்ள இந்தி பேசும் மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஐ நா சபை செய்திகளை இந்தி மொழியில் பரப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது இந்திய அரசு. அதற்கு உதவும் வகையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com