5ஜி அலைக்கற்றை; ஏலத்தேதி அறிவிப்பு!

5ஜி அலைக்கற்றை; ஏலத்தேதி அறிவிப்பு!

Published on

நாட்டில் 5ஜி தொலை தொடர்பு அலைக்கறைக்கான ஏலம் இம்மாதம் 26-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மொபைல் போன்களில் அதிவேகமான இன்டர்நெட் வசதிக்கு 5ஜி அலைக்கற்றை வழிவகுப்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் 5ஜி தொலை தொடர்பு அலைக்கறைக்கான ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கியது

இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்ததாவது;

நாட்டில் 5ஜி அலைக்கறைக்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ,ஐடியா ஆகியவை ஏலத்தில் பங்கேற்க உள்ளன

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அதானி மற்றும் அம்பானி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 5ஜி அலைக்கற்றை பெரும் தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com