கடந்த ஜூன் 10-ம் தேதி '777 சார்லி' என்ற திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. சார்லி என்ற செல்ல நாய்க்கும் அதன் உரிமையாளருக்கும் இடையேயான பாசத்தைப் பிரதிபலிக்கும் இந்த படத்தை கர்நாடக மாநில ,முதல்வர் பசவராஜ் நேற்று திரையரங்குக்கு சென்று பார்த்தார். .
படம் முடிந்த்ததும் கன்கலங்கியபடி வெளியே வந்த பசவராஜ் பொம்மை, செய்தியாளர்கலீடம் பேசியதாவது:
இந்த படத்தில் நடித்திருக்கும் நாய் தன் கண்ணாலேயே தனது உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. ஏற்கெனவே இதுபோன்று வளர்ப்பு நாய்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் வித்தியாசமாக இருக்கிறது. நாய்களின் அன்பு நிபந்தனையற்றது. தூய்மையானது.
-இவ்வாறு அவர் தெரிவித்தார், அவர் படம் பார்க்கும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்குமுன் அவரது செல்லப் பிராணியான் ஸ்னூபி என்ற நாய் இறந்துவிட, பசவராஜ் கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.