மக்களே உஷார்.. போனில் இந்த App வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை!

மக்களே உஷார்.. போனில் இந்த App வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை!

தமிழக மக்கள் யாரும் தங்கள் செல்போனில் கடன் செயலிகளை வைத்திருக்க வேன்டாம் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள எச்சரிக்கை வீடியோவில் கூறீயதாவது:

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த செயலிகள் எந்தவித நமகத்தனமையோ ஒழுங்குமுறையோ இல்லாமல் ஏராளமான செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் வழங்கப்படும் கடந்தொகைக்கு கணிசமான தொகையை  கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது.

ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதனைப்போலவே ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இச்செயலிகள் மூலம் வாங்கும் கடனைக் கட்டத் தவறினால் உங்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக அச்சுறுத்துகிறார்கள். ஆகவே.. பொதுமக்களே.. உங்களது போனில் இதுபோன்ற கடன் செயலிகளை உடனே டெலீட் செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கி கொள்வீர்கள்.

-இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ மூலமாக எச்சரித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com