சிதம்பரம் கோயில் கனகசபை: பக்தர்கள் ஏறி வழிபட அரசு அனுமதி! 

சிதம்பரம் கோயில் கனகசபை: பக்தர்கள் ஏறி வழிபட அரசு அனுமதி! 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு முக்கிய பிரமுகர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என்.ராதா என்பவரால் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில்  கொரோனா கட்டுப்பாடுகள் உத்தேசித்தும் கோயில் நிர்வாகத்தினர் கலந்தாலோசித்தும் முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஏப்ரல் 20-ம் தேதி உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடலூர் ஆட்சியர்  அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கனகசபை மண்டபத்தின் மீதேறி சபாநாயகரான நடராஜப் பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

-இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com