தமிழகத்தின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொன்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதிக்குப் பின் அவர் புதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதைப்போல், அவருக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆக தயாராக உள்ளார். கலைஞர் குடும்ப வாரிசாக இருந்தாலும் உதயநிதியும் பல சிரமங்களைத் தாண்டியே மேலே வந்துள்ளார்.
கடந்த 10 வருடம் அதிமுக-வின் கேடு கெட்ட ஆட்சியில் அரசு கஜானாவை சுரண்டி விட்டது. இந்நிலையில் திமுக மட்டுமே மிகச் சிறந்த ஆட்சி தருகிறது. மேலும் டெல்லிக்கு பயப்படாத ஒரே தலைமை நமது தலைமை மட்டுமே.
-இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.