டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து இன்று காலையில் தோஹா நோக்கி புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதா, பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

டெல்லியிலிருந்து இன்று காலையில் 100 பயணிகளுடன் கத்தார் ஏர்வேஸ் விமானம் தோஹா நோக்கி புறப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மேலாகப் பறக்கும்போது விமானத்தின் சரக்குப் பகுதியிலிருந்து புகை கிளம்பியதால் விபத்தைத் தவிர்க்கும் வகையில் விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. அதையடுத்து  பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.மாற்று விமானம் மூலம் அவர்கள் தோஹாவுக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படும்.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com