ஐபிஎல் தொடர்; சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரர் விலகல்!

ஐபிஎல் தொடர்; சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரர் விலகல்!

ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசன் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சிஎஸ்கே அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் தனக்கு ஏற்ப்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான கான்வே இப்போது இந்த ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே 9-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் கான்வே, இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பைக் கிள்ப்பியுள்ளது.

ஆனால் கான்வேக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதால்,  அதனை முடித்துவிட்டு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com