ரயில்வே ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வராதீங்க! ரயில்வேத் துறை!

ரயில்வே ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வராதீங்க! ரயில்வேத் துறை!

சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வழியனுப்ப வரும் நபர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் பல மாநிலங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.மேலும் இதுகுறித்து நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு (பார்த் பந்த்) அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்டுகளின் விற்பனை நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

பாரத் பந்த் அறிவிப்பின் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் மட்டுமே ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களிடம் உரிய பயணச் சீட்டுகள் இருக்கிறதா என்பதை டிக்கெட் பரிசோதகர்கள் சோதித்த பின்பே அனுமதிக்கப் படுவார்கள். அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com