ஐபிஎல் போட்டி; சிஎஸ்கே வெற்றிக்கு விஸ்வரூபம் எடுத்த தோனி!

ஐபிஎல் போட்டி; சிஎஸ்கே வெற்றிக்கு விஸ்வரூபம் எடுத்த தோனி!

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டதில், சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் இந்த முதல் வெற்றிக்குக் காரணமான  தோனியின் ஆட்டம் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக களம் இறங்கிய சிஎஸ்கே அணி,  முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வந்த உத்தப்பா மற்றும் ராயுடு ஓரளவு சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தாலும் 15 ஓவர்களுக்குள் அவர்களும் அவுட் ஆனார்கள். சிஎஸ்கே அணி கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஜடேஜா 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ப்ரெட்டோரியஸும் சில பவுண்டரிகள் அடித்து விக்கெட் இழந்தார்.

இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் 17 ஓவர்கள் தேவை என்ற நிலையில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டினார் தோனி. முதலில் ஒரு சிக்ஸர், அடுத்து இரண்டு பவுண்டரிகள், இடையே சில ரன்கள் என 17 ரன்களை ஒரே ஓவரில் குவித்து சிஎஸ்கேயை த்ரில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வரும் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி குறித்த ஹேஷ்டேகுகள், மற்றும் ஸ்பெஷல் வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com