டென்னிஸ் போதும்: நம்பர்-1 வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

டென்னிஸ் போதும்: நம்பர்-1 வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, 25 வயதே ஆன நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தன் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, கடந்த 2010-ம் ஆண்டுமுதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 15 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். 2019-ல் பிரெஞ்சு ஓபன்,  2021-ல் விம்பிள்டன், மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன்  ஆகிய போட்டிகளில் பட்டங்களை வென்றுள்ளார். தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து ஆஷ்லி பார்ட்டி வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதாவது:

டென்னிஸ் தவிரவும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளன. ஆனால் டென்னிசுக்காக உலகம் முழுவதும் சுற்றி எனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்திருக்க வேண்டியுள்ளது. அதனால்தான் இந்த ஓய்வு முடிவு! ஆனால், நான் மிகவும் நேசிக்கும் டென்னிஸ் விளையாட்டு, என் வாழ்வின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும். இனி நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண பெண்ணாக வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்.

-இவ்வாறு ஆஷ்லி பார்ட்டி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com