உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு: பிரதமர் வருகை!

உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு: பிரதமர் வருகை!

Published on

நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பிஜேபியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார். இதுகுறித்து அம்மாநில பிஜேபி தலைவர் மதன்கவுசிக் கூறியதாவது:

இன்று உத்ததராகண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் தாமியுடன், 10 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதில் பெரும்பாலானோர் புதியவர்கள். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த விழாவில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும்வகையில் ஏற்பாடுகளும், பல்லடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

-இவ்வாறு உத்தராகண்ட் மாநில பிஜேபி தலைவர் மதன் கவுசிக் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com