தமிழக பல்கலைத் துணைவேந்தர்கள் நியமனம்; மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா!

தமிழக பல்கலைத் துணைவேந்தர்கள் நியமனம்; மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா!

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை இன்று  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ள்து.

தமிழக பல்கலைக் கழகங்களுக்கு மாநில ஆளுநரே வேந்தராக இருக்கும் நிலையில் துணைவேந்தர்களை அவரே நியமித்து வருகிறார். இந்நிலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சட்டமனறத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழக  பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தெரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழக சட்டமன்றத்தில்  தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு, மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத் திருத்த சட்ட முன்வடிவு ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்யவுள்ளார். -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் சூழலில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க இருக்கிற்து.  இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com