பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; விழா  மேடையில் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின்! 

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; விழா  மேடையில் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின்! 

தமிழகத்தில்  31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் அடிக்கல் நாட்டுவதற்கும் இன்று மாலையில்  1 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். 

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட  ரூ. 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அன்றிரவே பிரதமர் டெல்லிக்கு செல்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுள்ளது. சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com