விருது நகருக்கு தேசிய விருது!

விருது நகருக்கு தேசிய விருது!

இந்த வருடத்துக்கான தேசிய MSME விருதுகள் பட்டியலில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு தெரிவித்ததாவது:

விருது நகர் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக இம்மாவட்டம்  இவ்வருடத்துக்கான தேசிய MSME விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டில் 112 பின்தங்கிய மாவட்டங்களை நிடி ஆயோக் அமைப்பு தேர்வு செய்து,  அவற்றை முன்னேற்றும் வகையில் கடந்த 2018-ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இவற்றில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது, விருது நகர் மாவட்டம் தன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக, தேசிய விருது கிடைக்கப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com