ஏஸ் ஷட்லர் பி.வி.சிந்து #SwissOpen Super 300-க்கு வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஏஸ் ஷட்லர் பி.வி.சிந்து #SwissOpen Super 300-க்கு வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்விஸ் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போட்டியின் இறுதிச் சுற்றில்  தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் என்பவருடன் சிந்து மோதினார். இந்த போட்டியின் துவக்கத்தில் சிந்து

முதல் சுற்றில் 21-16 என்ற புள்ளிகளுடன் முதல் சுற்றிலும், 2-வது சுற்றில் 21-8 என்ற புள்ளிகளுடன் 2-வது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதையடுத்து சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாவது:

எங்கள் ஏஸ் ஷட்லர் பி.வி.சிந்து #SwissOpen Super 300 பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று, நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, நம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com