மே 1-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: தமிழக அரசு!

மே 1-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: தமிழக அரசு!

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;.

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். இவற்றில் அந்தந்த கிராமங்களின் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை நடைபெறும்.

மேலும் இந்த கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம், மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகலில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது அவசியம். அப்படி பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும்.

-இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com