சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளர் பி.பி மாதவன் மீது  டெல்லி போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் தரப்பில் கூறியதாவது:

சோனியா காந்தியின் பி.ஏ-வான 71 வயதான பிபி மாதவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் வேலை செய்து வந்த அப்பெண்ணின் கணவர் 2020-ம் ஆண்டு இறந்ததையடுத்து, அப்பெண் மாதவனுடன் தொடர்புகொண்டு தனக்கு வேலை தருமாறு கேட்டதாகச் சொல்லப் படுகிறது.

அதன்பின்னர் மாதவன் தன்னை சுந்தர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-இவ்வாறு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com